நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 21 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 22 ஆவது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிஎம் கிஷான் திட்டத்தின் 22 ஆவது தவணை தொகையை மத்திய அரசு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தவணைத் தொகை தாமதம் இன்றி கிடைக்க விவசாயிகள் இ கேஒய்சி அப்டேட் செய்வது அவசியம். அதற்கு https://pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று திட்டத்தில் பயனடைந்து வரும் விவசாயிகள் இ கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
