நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில் இதுவரை 19 தவணை பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 20வது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அது குறித்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிஎம் கிஷான் உதவித்தொகையின் 20வது தவணையை வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி பிரதமர் மோடி விடுவிக்கிறார். உத்திரபிரதேசம் வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 9.7 போடி பயனாளர்களின் வங்கி கணக்கில் தலா 2000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. முன்னதாக விவசாயிகள் இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள தங்களுடைய வங்கி கணக்கில் கேஒய்சி அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.
