தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் 2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவைச் சேர்ந்த சில தலைவர்களும் நிர்வாகிகளும் முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பேசி வந்த நிலையில், காங்கிரஸ் மேலிடம் மற்றும் மாநிலத் தலைவர்கள் ராகுல் காந்தியையே தங்களது ஒரே பிரதமர் வேட்பாளராக உறுதியாக வலியுறுத்தினர்.
இந்த விவகாரத்தால் கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுவதாகவும், ஆட்சியில் தொடர்வதில் சிக்கல் எழுவதாகவும் தகவல்கள் வெளியான சூழலில், செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக் கணக்குகளையும் ராஜதந்திரத்தையும் கருத்தில் கொண்டு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் முடிவை விஜய் அறிவிக்கக்கூடும் என்ற புதிய அரசியல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
