திக்… திக்… இன்ஸ்டாகிராம் காதலால் பிளஸ் டூ மாணவன் படுகொலை… சாக்கில் கட்டப்பட்டு சடலமாக மீட்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 4, 2026

Spread the love

திருவனந்தபுரம் பங்கப்பாறையைச் சேர்ந்த அபி ராம் (17) என்ற பிளஸ் டூ மாணவன் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது நண்பரைச் சந்திக்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டார். இருப்பினும், இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் அணைக்கப்பட்டிருந்ததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் ஸ்ரீகாரியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன வழக்குப் பதிவு செய்து, மாணவனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தியும், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவர் இருப்பிடங்களை ஆய்வு செய்தும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

திங்கள்கிழமை மாலையில், பங்கப்பாறையில் உள்ள ஒரு வெறிச்சோடிய நிலத்திலிருந்து அபி ராமினுடைய உடல் ஒரு சாக்கில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சமூக வலைதளம் தொடர்பான காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. சந்தேக நபரான 17 வயது சிறுவன், தனது தோழியின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி அபி ராமுக்கு மெசேஜ் அனுப்பி குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துள்ளான். அங்கு வைத்து கழுத்தில் பெல்ட்டை இறுக்கிக் கொலை செய்து, உடலைச் சாக்கில் அடைத்து மறைக்க முயன்றது தெரியவந்துள்ளது.

   

https://twitter.com/HateDetectors/status/2117656138636509547/video/1

   

இக்கொலை வழக்கு தொடர்பாக 17 வயது சிறுவன், ஒரு சிறுமி மற்றும் உடலை மறைக்க உதவியதாகக் கருதப்படும் உமர் என்ற ரவுடி உட்பட மூன்று பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பெற்றோர் புகார் அளித்த உடனடியாக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவனின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் எனக்கூறி, அபி ராமினுடைய உறவினர்களும் உள்ளூர்வாசிகளும் ஸ்ரீகாரியம் காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.