பயத்தில் உயிரை மாய்த்து கொண்டாரா…? “காதலிக்க மறுத்த பிளஸ்-1 மாணவிக்கு கத்திக்குத்து…” கடலூரில் வாலிபரின் கொடூர செயல்…! பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 28, 2026

Spread the love

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஐயப்பன், வேலைக்குச் சென்ற இடத்தில் அறிமுகமான 11-ஆம் வகுப்பு மாணவியைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த மாணவி சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த ஐயப்பன், கடந்த ஜூலை 26-ஆம் தேதி மாணவி வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து உள்ளே புகுந்து கத்தியால் பல இடங்களில் குத்திக் காயப்படுத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்துச் சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடு தலைமறைவான ஐயப்பனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அரசுக் கல்லூரிக்குப் பின்புறம் உள்ள மரத்தில் நபர் ஒருவர் சடலமாகக் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சென்று பார்த்தபோது, அது தப்பிச் சென்ற ஐயப்பன் என்பது உறுதியானது. காவல்துறையின் கைது நடவடிக்கைக்குப் பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் எனப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.