திருப்பத்தூர் மாவட்டம் நாட்டரம்பள்ளி அடுத்த கொத்துரை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருடைய மகன்தான் முகிலன். 16 வயதாகும் இவர் திருப்பத்தூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இப்படியான நிலையில் மாணவர் நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரைக் காணாததால் ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுடைய மகன் வீட்டுக்கு வந்தானா என்று கேட்டுள்ளனர். மகன் வீட்டிற்கு வரவில்லை என்று அவர்கள் தெரிவித்த நிலையில் எங்கள் மகன் உங்கள் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கிதான் படித்து வருகிறான், அப்படி இருக்கும்போது எப்படி வீட்டிற்கு வருவான் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
பிறகு பெட்ரோல் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்த நிலையில் திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் மாணவனை தேடி வந்த நிலையில் நேற்று இரவு பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மாணவன் பள்ளியின் பின்புறம் உள்ள கிணற்று பக்கம் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததால் மாணவன் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர். இன்று காலை போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் மாணவனை தேடி வந்த நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள இரும்பு கம்பியால் மூடப்பட்ட கிணற்றில் மாணவன் பிணமாக மிதந்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவனை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீசார் மீட்ட நிலையில் மகனின் சடலத்தை கண்டு பெற்றோர் கதறி எழுதனர். மாணவனின் தந்தை மகன் சென்ற இடத்துக்கு செல்கிறேன் என்று கூறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த நிலையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை மர்ம மரணம் என்ன வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…