Connect with us

டிமிக்கி கொடுத்த முன்னணி பாடகிகள்.. அசால்டாக பாடி அசத்திய எஸ்.ஜானகி.. அப்படி என்ன பாட்டு அது..?

CINEMA

டிமிக்கி கொடுத்த முன்னணி பாடகிகள்.. அசால்டாக பாடி அசத்திய எஸ்.ஜானகி.. அப்படி என்ன பாட்டு அது..?

 

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகி ஜானகிக்கு என தனி இடம் உள்ளது. இவரது குரலில் வரும் பாடல்களை கேட்டு ரசிகர்கள் மெய்மறந்து போவார்கள். இந்நிலையில் பெண் கதாபாத்திரங்கள் சோகமாக பாடும் பாடல் எனில் ஜானகி தான் ஒரே சாய்ஸ். ஸ்ரீதேவி, ராதா, அம்பிகா உள்ளிட்ட நடிகைகள் பாடிய சோகப் பாடலுக்கு குரல் கொடுத்தவர் பின்னணி பாடகி ஜானகி.

   

ஆந்திராவை பூர்விகமாக கொண்ட எஸ்.ஜானகி பல இசை நிகழ்ச்சிகளில் முதலில் பாடினார். அதன் பிறகு அவர் சினிமாவுக்குள் நுழைந்தார். முதலில் அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் அன்னக்கிளி படத்தில் ஜானகியின் திறமையை நிரூபிக்கும் வரையில் அன்னக்கிளி உன்னை தேடுதே என்ற பாடலை இளையராஜா கொடுத்தார்.

அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதன் பிறகு பல நூறு பாடல்களை பாடி அசத்தியவர் ஜானகி. கடந்த 1962-ஆம் ஆண்டு ஜெமினி சாவித்திரி நடிப்பில் வெளியான கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு எஸ்.எம் சுப்பையா நாயுடு இசையமைத்துள்ளார். அந்தப் படத்திற்காகவே சிங்கார வேலனே தேவா என்ற பாடல் உருவானது.

அந்த பாடலை பாடுவது கடினம் என முன்னணி பாடலாக இருந்த பி.சுசீலா, லீலா ஆகியோர் மறுத்துவிட்டனர். ஏனெனில் நாதஸ்வரத்தின் ஸ்வரங்களோடு குரல் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே விதிமுறை. கடைசியில் சுப்பையா நாயுடு ஜானகியை காரக்குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வரத்தோடு இணைந்து பாட வைத்தார்.

தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் மிகவும் கடுமையான அந்த பாடலை இளம் வயதில் ஒரே டேக்கில் பாடி அசத்தியவர் ஜானகி. அவர் அந்த பாடலுக்காக பலரது பாராட்டையும் பெற்றார். இசை ஜாம்பவான்கள் அசந்து போகும் அளவிற்கு பாடி ஜானகி பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top