ஷங்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றம் பிரபலமான புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். ஷங்கர் அவரது தனித்துவமான கதைக்கும் பிரம்மாண்டமாக மேக்கிங்கும் புகழ்பெற்றவர். மிகுந்த பொருட்ச அளவில் செட் அமைத்து பாடல்களுக்காக பிரத்தியேகமாக படம் பிடிப்பவர் ஷங்கர். அதனால் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கின்றனர்.

தற்போது பொங்கலை முன்னிட்டு ஷங்கர் ராம் சரணை வைத்து தெலுங்கில் இயக்கிய திரைப்படம் Game Changer வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை தில்ராஜு தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படம் ஆனது 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்த Game Changer படத்திற்கு எதிராக சதிகள் நடப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் ராம்சரனுக்கு எதிராக இருக்கும் ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்கள் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் வரை செலவழித்து இந்த படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருகிறார்களாம்.

அதுமட்டுமல்லாமல் ஓவர் சீசில் வெளியான இந்த கேம் சேன்ஜர் படத்தின் hd பிரிண்ட் எடுத்து வைத்து ஒரு குழுவினர் தில்ராஜுக்கு போன் செய்து நீங்கள் எங்களுக்கு 5 கோடி தர வேண்டும் இல்லை என்றால் இந்த எச்டி பிரிண்டை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டினார்களாம். ஆனால் தில்ராஜு ஏற்கனவே இந்த படம் சரியாக போகவில்லை என்ற டென்ஷன்ல இருந்ததால் இவர்கள் சும்மா சொல்கிறார்கள் என்று நினைத்து விட்டாராம். ஆனால் அவர்கள் சொன்னது போலவே இந்த கேம் சேஞ்சர் படத்தை லோக்கல் சேனல்களில் வெளியிட்டு விட்டார்களாம். இதனால் பெரும் பரபரப்பு ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் சமாளித்து ராம்சரண் தப்பிப்பாரா ஷங்கருக்கு நினைத்த அளவு இந்த படத்திற்கு வசூல் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
