பயங்கர இடி சத்தத்துடன்… திடீரென கோல்ப் மைதானத்தில் விழுந்த விமானம்… அதிர்ச்சியூட்டும் வீடியோ..!!

By Soundarya on ஆவணி 18, 2025

Spread the love

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மோனா வேல் கோல்ப் கிளப்பில் சிறிய பைபர்  செரோக்கி  ரக விமானம் ஒன்று விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர்  பயிற்சியில் ஈடுபட்டிருந்த கொண்டிருந்த பொழுது விமானம் விழுந்துள்ளது. விமானத்தில் இருந்த இருவரும் சிறிய காயங்களோடு உயிர் தப்பியுள்ளார்கள். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்ட காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் . விமானம் மிகப்பெரிய இடி சத்தத்தோடு மைதானத்தில் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த கோல்ப் வீரர்கள் உடனடியாக உதவிக்கு சென்றுள்ளார்கள். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.