எல்ஐசி நிறுவனத்தின் மேலும் 2.5% முதல் 3 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய முதற்கட்ட பணிகளை ஒன்றிய அரசு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக சுமார் 14000 கோடி முதல் 17,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. எல்ஐசியில் தற்போது 96.5% பங்குகளை வைத்திருக்கும் ஒன்றிய அரசு மே 2027க்குள் தன்னுடைய பங்குகளை 90 சதவீதமாக குறைக்கிறது.
