“பக்கத்தில் கூட வராத புரோக்கர்…” வீடு பார்க்க வந்த தம்பதியை கடித்து குதறிய பிட்புல் நாய்… தெறித்து ஓடிய பக்கத்து வீட்டார்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 13, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் பதியாலாவில் வீடு வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் ஏஜென்டுடன் சொத்தைப் பார்வையிடச் சென்ற தம்பதியினரை, வீட்டிற்குள் இருந்த ஆபத்தான பிட்புல் நாய் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அழைப்பு மணியை அடித்து காத்துக்கொண்டிருந்த போது, திடீரென வீட்டிற்குள் இருந்து வந்த நாய், தம்பதியை நோக்கிப் பாய்ந்து உடலின் பல இடங்களில் கடித்துக் குதறியுள்ளது.

கதறித் துடித்த அவர்களின் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார் மற்றும் பொதுமக்கள், உடனடியாகப் போராடி நாயிடமிருந்து அவர்களை மீட்டனர். இருப்பினும், நாய் கடித்ததில் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த தம்பதியினர், உடனடியாகப் பதியாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நாய்களை வளர்ப்பதில் காட்டப்படும் அலட்சியம் குறித்தும், இந்தச் சம்பவம் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.