பெங்களூருவில் நடுங்கவைத்த விபத்து… CNG கேஸ் நிரப்பியபோது வெடித்து சிதறிய குழாய்…! கார் டிரைவரின் கதி…?

By Swetha on ஆனி 27, 2026

Spread the love

பெங்களூரு கோரமங்களா பகுதியில் சி.என்.ஜி. கேஸ் விநியோகம் செய்யும் விற்பனை நிலையம் ஒன்று அமைந்துள்ளது. சம்பவத்தன்று இந்த கேஸ் விற்பனை நிலையத்திற்கு கார் ஒன்று எரிவாயு நிரப்புவதற்காக வந்துள்ளது.

அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென கேசின் அதிகப்படியான அழுத்தம் தாங்காமல், எரிவாயுவை செலுத்தும் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தின் காரணமாக அந்த கேஸ் விற்பனை நிலையப் பகுதியே பெரும் பரபரப்புக்குள்ளானது.

   

இந்த பயங்கர வெடி விபத்தில் காரில் இருந்த நபர் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்கள் பாதிக்கப்படைந்த நிலையில், அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் உடனடியாக செயல்பட்டு காரில் இருந்த டிரைவரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.