தனது பிறந்தநாளில் நற்பணி மன்றம் துவங்கிய பிரபல நடிகர் விஷ்ணு விஷால் இணையத்தில் வெளியான புகைப்படங்கள்….

By Samrin

Updated on:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்  நடிகர் விஷ்ணு விஷால். இவர்வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர். இவரது தந்தை தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரியான ரமேஷ் குடாவ்லா.இவர் கேம்பியன் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார் .

   

எஸ் ஆர் எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் மார்க்கெட்டிங்கில் எம்பிஏ படித்து முடித்தார்.இவர் TNCA லீக் கேம்களில் விளையாடி கிரிக்கெட் வீரராக மாறினார்.ஆனால்  ஒரு காலில் ஏற்பட்ட காயம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டு வந்தது.தன் பிறகு  சினிமாவின் மீது ஆர்வமாக இருந்தார்.

சீனிமாவிற்காக தனது பெயரை விஷ்ணு என்று மாற்றிக்கொண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தின் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’  திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இப்படத்தில் ஆனந்த் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் கவனதை   ஈர்த்தார்.

இதை தொடர்ந்து இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘பலே பாண்டியா’ படத்தில் அதிரடியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு வெளியான ‘குள்ளநரி கூட்டம்’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் தமிழில்  முண்டாசுப்பட்டி, மாவீரன் ,ராட்சசன், எஃப் ஐ ஆர், குள்ளநரி கூட்டம், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு வெளியான ‘கட்டாகுஸ்தி’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில்  வரவேற்பு பெற்றார்.இவர் கட்டா குஸ்தி, எஃப் ஐ ஆர் ,சிலுக்குவார் பட்டி சிங்கம், கதாநாயகன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,போன்ற படங்களை தயாரிப்பாளரும் கூட.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படமானது மிகப்பெரிய வெற்றி படமாக  அமைந்தது. அதை தொடர்ந்து  விஷால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா  இயக்கி வரும் ‘லால் சலாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால்.

இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை தற்போது விஷ்ணு விஷால் நற்பணி மன்றமாக மாற்றி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம் தற்போது இந்த நிகழ்ச்சில் எடுத்த புகைப்படமானது  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.