“கல்யாணத்துக்கு 70 நிமிஷம் லேட்டா வந்த போட்டோகிராபர்…” கோர்ட்டுக்கு தூக்கி சென்று ரூ.35,000 அபராதம் வாங்கிய புதுமண ஜோடி… கர்நாடகாவில் அரங்கேறிய அதிரடி சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 29, 2026

Spread the love

திருமணத்திற்கு 70 நிமிடங்கள் தாமதமாக வந்து முக்கிய சடங்குகளை படம் பிடிக்க தவறிய புகைப்படக் குழுவினர் மீது புதுமணத் தம்பதியினர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ரூ.35,000 இழப்பீடு பெற்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் திருமண நிகழ்வுகளை வாழ்நாள் நினைவுகளாகச் சேமித்து வைக்கப் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற திருமண விழாவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட புகைப்படக் குழுவினர், குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் சுமார் 70 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளனர்.

   

இதனால் மணமகனின் வருகை மற்றும் சில முக்கியமான திருமணச் சடங்குகளைப் படம் பிடிக்க முடியாமல் போய்விட்டது என்றும், தாமதம் குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறி அந்தப் புதுமண ஜோடி நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியது. மனுவை விசாரித்த நீதிமன்றம், புகைப்படக் குழுவினரின் அலட்சியத்தைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட திருமண ஜோடிக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.