தலைமைச் செயலகத்திற்குள் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ரமேஷ் மேற்கொண்டுள்ள புதிய நடைமுறை தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது அறைக்குள் புகைப்படக் கலைஞர்களை நியமித்துள்ள அவர், அறைக்கு வெளியே பிரத்யேகமாக ‘கியூஆர்’ ஸ்கேனர் ஒன்றையும் அமைத்துள்ளார். இதன் மூலம் அமைச்சரைச் சந்திக்க வரும் பொதுமக்கள் அவருடன் எடுக்கும் புகைப்படங்களை அந்த ஸ்கேனரை ஸ்கேன் செய்து எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு புதுமையான முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், தவெகவினர் மக்கள் பணிகளை விட விளம்பரம் தேடுவதிலேயே அதிகக் குறியாக இருக்கிறார்கள் என்ற விமர்சனம் ஏற்கனவே வலுவாக உள்ள சூழலில், தலைமைச் செயலகத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ள இந்த விசித்திர ஏற்பாடு புதிய சர்ச்சையையும், கடுமையான விமர்சனங்களையும் பொதுமக்களிடையேயும் எதிர்க்கட்சியினரிடையேயும் உருவாக்கியுள்ளது.
