Connect with us

பசியோடு திரிஞ்ச விஜய் சேதுபதிக்கு இரையாக அமைந்த ‘மகாராஜா’.. எமகண்டத்தை தாண்ட உதவிய நபர்..

CINEMA

பசியோடு திரிஞ்ச விஜய் சேதுபதிக்கு இரையாக அமைந்த ‘மகாராஜா’.. எமகண்டத்தை தாண்ட உதவிய நபர்..

 

இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது ஐம்பதாவது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு மகாராஜா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பஷன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் அனுராக் காஷ்யப், அபிராமி, நாட்டி, முனிஸ்கான், சிங்கம்புலி, பாரதிராஜா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Vijay Sethupathi in The Family Man 3?

   

சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முடி திருத்தும் தொழிலாளியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் படத்தின் டிரைலரில் என் வீட்டு லட்சுமி காணாமல் போயிடுச்சு என்று விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் மகாராஜா ட்ரைலர் வெளியீடு.. எப்படி இருக்கு தெரியுமா? | Actor vijay sethupathi 50th movie maharaja trailer review

அதற்கு போலீசார் லட்சுமி என்றால் நகையா? பொருளா? பெண்ணா? என கேட்டனர். எல்லாவற்றிற்கும் விஜய் சேதுபதி இல்லை என பதில் அளித்துள்ளார். ட்ரைலர் சஸ்பென்ஸ் ஆக முடிந்துள்ளது. சமீபகாலமாக விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசான படங்கள் அவ்வளவாக வரவேற்பை வரவில்லை. அப்படி இருக்க மகாராஜா படம் சூப்பர் ஹிட் படமாக அமையும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பிலோமின் ராஜ் - தமிழ் விக்கிப்பீடியா

ஏனென்றால் சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு சிலர் இந்த படத்தை பார்த்துள்ளனர். அதிலும் முக்கியமாக மகாராஜா படத்தில் எடிட்டர் பிலோமின் ராஜா தனது முழு திறமையை காண்பித்துள்ளார். எடிட்டிங் வேற லெவலில் இருப்பதாக பேசுகின்றனர். பிலோமின் ராஜா லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து வேலை பார்த்துள்ளார். மகாராஜா படம் விஜய் சேதுபதி திரை வாழ்கையில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Philomin Raj : Biography, Age, Movies, Family, Photos, Latest News - Filmy Focus

author avatar
Priya Ram
Continue Reading
To Top