தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), உரிமை கோரப்படாமல் நீண்ட காலமாக முடங்கிக்கிடக்கும் பிஎப் பணத்தை நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும் ‘ஆட்டோ செட்டில்மென்ட்’ (Auto-settlement) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 31.8 லட்சம் கணக்குகளில் முடங்கியுள்ள ரூ.10,181 கோடி தொகையை உரியவர்களிடம் சேர்க்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைக் கொண்ட, ரூ.1,000-க்கும் குறைவான இருப்புத் தொகை உள்ள கணக்குகளுக்கு எவ்வித விண்ணப்பமும் இன்றி தானாகவே பணம் வந்து சேரும் வகையில் பைலட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் அதிக இருப்புத் தொகை கொண்ட சுமார் 8.1 லட்சம் கணக்குகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 2026-க்குள் பிஎப் பணத்தை யுபிஐ (UPI) வழியாகப் பெற்றுக்கொள்ளும் புதிய தொழில்நுட்ப வசதியையும் இபிஎப்ஓ உருவாக்கி வருகிறது. பயனாளர்கள் தங்களின் யுஏஎன் (UAN) எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும், வங்கி விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொண்டால், பிஎப் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே தங்களின் சேமிப்புத் தொகையை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம்…
தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…