தனியார் துறையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும். சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கழித்து வருங்கால பைப்பு நிதி அமைப்பில் டெபாசிட் செய்ய அரசு ஒரு விதியை உருவாக்கியுள்ளது. அந்த டெபாசிட் பணத்திற்கு பெயர்தான் EPFO பிஎஃப். அந்த பிஎஃப் பணத்திற்கு ஆண்டு வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்க உள்ளதாக அரசு கூறியுள்ளது. அதேபோல் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இச்சலுகை வழங்கப்படாது கருணையின் அடிப்படையிலேயே வழங்க உள்ளதாக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இதுவரை கருணைத்தொகை ரூ. 8.8 லட்சமாக இருந்தது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த சலுகை அமலுக்கு வந்துள்ளது. ரூ.8.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் இறந்து விட்டால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் கொடுக்கப்படும். மத்திய அரசு ஊழியர்கள் பணியின் போது இறந்து விட்டால் ரூ. 15 லட்சம் கருணைத் தொகையாக சட்டப்பூர்வ வாரிசுக்கும் அல்லது நாமினிக்கும் வழங்கப்படும். 2025 ஜூன் மாதத்தில் EPFOவின் தற்காலிக ஊழிய தரவு வெளியிட்டு 2.18 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன, மே மாதத்தில் 2. 01 மில்லியனாக இருந்தது. தற்போது 8.9% வளர்ச்சியை காட்டியுள்ளது. மேலும் 2024 ஜூன் மாதத்தில் 1.93 மில்லியன் ஆக இருந்தது. ஒரே ஆண்டில் 12.9% வளர்ச்சியை எட்டி உள்ளது.
புதிய சந்தா தாரர்களுக்கு 2025 ஜூன் மாதத்தில் 1.06 மில்லியன் பிஎஃப் தோராயமாக சேர்ந்துள்ளது. 2025 மே மாதத்தை விட 12.6 சதவீதம் மற்றும் ஆண்டுக்கு 3.61% அதிகமாகியுள்ளது. இதில் 18 முதல் 25 வயது உடையோர் 60.2% (0.64 மில்லியன்) உள்ளனர். புதிதாக வேலைக்கு சேர்ந்த ஊழியருக்கு 0.97 மில்லியனாக இருந்தன. மே 2025 மே மாத கணக்கின்படி 11.4% அதிகமாகியுள்ளது. 2024 ஜூன் மாதத்தை விட 12.15 % அதிகமாகியுள்ளது.
