தமிழகத்தில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் எரிபொருள் விலை, வாகன ஓட்டிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நேற்று சற்றே குறைந்திருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ₹108.01-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ₹99.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 5-ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையானது ஒட்டுமொத்தமாக சுமார் ₹8 வரை கணிசமாக உயர்த்தப்பட்ட நிலையில், நேற்றைய தினம் விலை சற்றே குறைந்ததால் நிம்மதியடைந்த மக்களுக்கு, இன்றைய இந்த திடீர் விலை உயர்வு மீண்டும் கூடுதல் சுமையாகவும் ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.
