BREAKING: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது… அதிகாலையிலேயே ஷாக் நியூஸ்…!

By Nanthini on வைகாசி 26, 2026

Spread the love

சர்வதேச சந்தையில் நிலவி வரும் மேற்காசிய போர் பதற்றத்தைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5-வது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ₹108.01-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ₹99.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி மாற்றத்தால், கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ₹8 வரை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு போன்ற மறைமுகப் பாதிப்புகளால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.