தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்களில் பெறப்படும் மணக்களுக்கு 48 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். சிவகங்கை மாவட்டத்தில் தினமும் ஆறு முகாம்கள் வீதம் வாரத்திற்கு 4 நாட்கள் முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திருபுவனம் பேரூராட்சி கொந்தகை, மடப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகங்களில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மனு அளித்தனர். நேற்று திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் கிட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மிதந்து வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் என்பவர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த மனுக்களை மீட்டனர். இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி கூறியதாவது, மனுக்கள் மிர்ந்து வந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட ஆறு பட்டா மாறுதல் மனுக்களின் நகல்கள் இருந்துள்ளது. அந்த மனுவின் மீது ஏற்கனவே தீர்வு காணப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
