ரூ.634 கோடி நியமன வழக்கு…. அடுத்தடுத்து ஆப்பு…. நேருவைத் தொடர்ந்து சகோதரர்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்த உயர்நீதிமன்றம்…. பரபரப்பு தீர்ப்பு….!

By Nanthini on ஐப்பசி 27, 2026

Spread the love

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்தில் சுமார் ரூ.634 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த நாள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடர்பான விசாரணையில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்பட்டது.

   

இதனைத் தொடர்ந்து, இந்த முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கே.என்.நேருவின் சகோதரர்களான கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன் மற்றும் டி.கவிபிரசாத், டி.ரமேஷ், ஆர்.நாராயணன், தியாகராஜன் செல்வமணி ஆகியோர் தங்களது தரப்பில் மனு தாக்கல் செய்தனர். அதாவது, பிப்ரவரி 20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி அவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.

   

இவ் வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களையும் நிராகரித்துத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.