தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் வேட்புமனுவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. பெரம்பூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், விஜய் தனது மனைவிக்கு வழங்கியதாகக் கூறப்படும் ₹12.60 கோடி நிதி விவகாரம் குறித்துச் சரியான தகவல்கள் வேட்புமனுவில் இடம்பெறவில்லை என்றும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வேட்புமனுவை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு, மனுதாரரின் கோரிக்கையில் போதிய சட்ட முகாந்திரம் இல்லை என்பதைக் கவனித்ததுடன், இத்தகைய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று திட்டவட்டமாகக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் நடிகர் விஜய்யின் தேர்தல் களப்பணிகளில் இருந்த ஒரு முக்கிய சட்டச் சிக்கல் நீங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.
