விஜய்க்கு வந்த புதிய சிக்கல்.. தவெக கட்சிக்கு ‘பீட்டா’ விடுத்த பகீர் எச்சரிக்கை.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் பிரச்சாரத்தின் போது, புறாக்களுக்கு வண்ணம் தீட்டிப் பயன்படுத்தப்பட்டதற்கு பீட்டா (PETA) இந்தியா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்களில் கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர், புறாக்களின் இறக்கைகளில் கட்சியின் கொடி நிறத்தை ஒத்த வண்ணங்களைத் தீட்டி பறக்கவிட்டனர். இந்தச் செயல் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பறவைகளின் இறக்கைகளில் செயற்கை வண்ணங்களைத் தீட்டுவது அவற்றின் இயற்கையான தன்மையைப் பாதிப்பதோடு, அந்தப் பறவைகளுக்குத் தேவையற்ற துன்புறுத்தலை அளிக்கும் செயல் என பீட்டா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பீட்டா இந்தியா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில், பறவைகளின் இறக்கைகள் மற்றும் தோலில் இரசாயனம் கலந்த வண்ணங்களைப் பூசுவது அவற்றின் ஆரோக்கியத்திற்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது. மேலும், இத்தகையச் செயல்கள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விதிமீறலாகக் கருதப்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரச்சாரங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

   

அரசியல் களத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக வாயில்லா ஜீவன்களைப் பயன்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி பிரச்சாரங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், விஜய்யின் கட்சித் தொண்டர்கள் செய்த இந்தச் செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பிலிருந்து முறையான விளக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.