வேலூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமியைக் காண வந்த அரப்பாக்கம் பகுதி அதிமுக வட்டச் செயலாளர் காமராஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் காமராஜ் திடீரென மயங்கி விழுந்ததும், அங்கிருந்த பெண் ஒருவர் பதறியபடி “அவரைக் காப்பாற்றுங்கள்” எனக் கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக மீட்புக் குழுவினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் காவல்துறையினர், அவர் கடுமையான நெஞ்சு வலி (மாரடைப்பு) காரணமாகவே உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
https://www.instagram.com/reel/DcvfLHVkTrU
