குஷியோ குஷி…. தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் இனி… மாணவர்களுக்கு அரசு செம்ம ஹேப்பி நியூஸ்…!

By SATHISH R on ஆனி 26, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இடங்களை உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாணவர்களின் கூடுதல் தேவையைக் கருத்தில் கொண்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% வரையிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% வரையிலும், மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 10% வரையிலும் கூடுதல் இடங்களை உருவாக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

இந்த கூடுதல் இடங்கள் மூலம் தகுதியான மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு தடையின்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்த சிறப்பு அனுமதியின் கீழ் கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் முழு விவரங்களையும் அந்தந்த கல்லூரிகள் முறையாகத் தொகுத்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.