ஒரே மேடையில் பெரியய்யா + சின்னம்மா + தளபதி?… திமுக, அதிமுக-விற்கு செக் வைத்த விஜய்… தமிழக அரசியலில் காத்திருக்கும் மிகப்பெரிய ‘கிளைமாக்ஸ்’!….!!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம், ஏப்ரல் 23 வாக்குப்பதிவை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், புதிய திருப்பமாக தவெக தலைமையிலான மூன்றாவது அணி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கூட்டணிகளும் தங்களது பலத்தை நிலைநிறுத்தி வரும் நிலையில், இதுவரை எந்தக் கூட்டணியிலும் இணையாத விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனித்து நிற்குமா அல்லது புதிய கூட்டணிகளை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோரின் திடீர் கைகோர்ப்பு, தமிழக அரசியலில் ஒரு புதிய அதிகார மையத்தை நோக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கட்சியையும் சின்னத்தையும் இழந்த நிலையில் இருக்கும் ராமதாஸின் பாமக மற்றும் தனித்துவிடப்பட்ட சசிகலாவின் அஇபுதமமுக ஆகியவை இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. ‘வெற்றிக் கூட்டணி’ அமைக்கத் தயாராக இருப்பதாக ராமதாஸ் கூறியிருப்பது, தவெக தலைவர் விஜய்க்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் பாஜகவுடனான பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆதரவைப் பெற்றுள்ள விஜய், இப்போது ‘பெரியய்யா’ ராமதாஸ் மற்றும் ‘சின்னம்மா’ சசிகலாவுடன் கூட்டணி அமைத்தால், அது வட மாவட்டங்களில் வன்னியர் வாக்குகளையும், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளையும் ஒருங்கிணைக்க உதவும்.

புள்ளிவிவரங்களின்படி, தவெகவிற்கு ஏற்கனவே 15% முதல் 20% வரை வாக்கு வங்கி இருப்பதாகக் கணிப்புகள் கூறுகின்றன. விஜய்யின் இளையோர் பட்டாளம் மற்றும் நடுநிலையாளர்களின் வாக்குவகுளுடன், ராமதாஸ் மற்றும் சசிகலாவின் சமூக ரீதியிலான செல்வாக்கு இணைந்தால், இந்த மூன்றாவது அணி சுமார் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கடும் போட்டியை உருவாக்கும். ராமதாஸ் மற்றும் சசிகலாவிடம் தற்போது அதிகாரப்பூர்வ சின்னங்கள் இல்லாதது விஜய்க்கு சாதகமான அம்சம். இவர்கள் தவெகவின் ‘விசில்’ சின்னத்திலேயே போட்டியிட முன்வந்தால், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒரே சின்னம் பரவலாகச் சென்றடையும், இது தேர்தலுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் வாக்குறுதியை நிறைவேற்றவும் ஏதுவாக இருக்கும்.

அரசியலில் ‘கூட்டி கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வர வேண்டும்’ என்ற ரஜினியின் அண்ணாமலை பட வசனத்தைப் போல, விஜய் இந்த மெகா கூட்டணியை அமைத்தால் அது திமுக, அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை உடைக்கும் வலிமை பெறும். ராமதாஸ் மற்றும் சசிகலாவின் அரசியல் அனுபவமும், விஜய்யின் மக்கள் செல்வாக்கும் இணைவது ஒரு ‘வின்-வின்’ (Win-Win) சூழலாகவே அமையும். முதலமைச்சர் வேட்பாளர் ரேஸில் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் இருப்பதாகக் கருதப்படும் விஜய், இந்தச் சரியான வியூகத்தை வகுத்தால், 2026 தேர்தல் முடிவு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக அமையக்கூடும்.

Muthu Mani

Recent Posts

சாமி கும்பிடுவது போல நடிப்பு… சிசிடிவியில் சிக்கினாரா மர்மப் பெண்?… கோயிலில் பட்டப்பகலில் திருட்டு… பெண் செய்த அதிர்ச்சி காரியம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாதத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சதுர்தாம் கோயிலில், பட்டப்பகலில் நூதனமான திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

10 minutes ago

ஐயோ கொடுமை..! மீதி கேட்டதற்கு இப்படியா?… சில்லறை தகராறு… பேருந்தில் வெடித்த வாக்குவாதம்…. பெண் நடத்துனருக்கு நேர்ந்த கொடூரம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டம் மனுகுரு பகுதியைச் சேர்ந்த மௌனிகா என்பவர், தனது மகனுடன் பத்ராசலம் நோக்கிச் சென்ற…

20 minutes ago

“டீ-ல ஏன் சர்க்கரை இல்ல?”… இப்படி பண்ணுவாங்களா?.. கடைக்காரர் சொன்ன ஒரு வார்த்தை… கைகலப்பில் முடிந்த விபரீதம்… அரங்கேறிய பகீர் சம்பவம்…!!

மும்பையின் ஜோகேஸ்வரி மேற்கு, ஓஷிவாரா ஆனந்த் நகர் பகுதியில் அமைந்திருக்கும் சுன்னி மசூதி அருகே சிறிய தேநீர்க் கடை ஒன்று…

29 minutes ago

இப்படியொரு விபரீதமா?… ஒரு சிறிய அலட்சியம்… அதிவேகத்தில் வந்த மரணம்… இரண்டு உயிர்கள் பலி… 14 வயது சிறுவனால் நேர்ந்த விபரீதம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதியில், 14 வயது சிறுவன் தனது தந்தைக்கு தெரியாமல் வீட்டிலிருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு நண்பருடன்…

37 minutes ago

ஷாக்..! சினிமா பாணியில் சேஸிங்… வேனுக்குள் இருந்த ரகசிய அறை… சிக்கிய ரூ. 4 கோடி ஹவாலா பணம்… வருமான வரித்துறை அதிரடி என்ட்ரி…!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய்-3 சாரோடா பகுதியில், பிக்கப் வாகனம் ஒன்றிலிருந்து கணக்கில் வராத நான்கு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை…

55 minutes ago

அடபாவேமே..! ரூம் வாசலில் நடந்த அதிர்ச்சி… சுருண்டு விழுந்த புதுமணப் பெண்… அடுத்த 5 வினாடிகளில் நடந்த பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் CCTV…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆன முஸ்கான் என்ற இளம் பெண் மர்மமான முறையில்…

1 மணத்தியாலம் ago