Categories: CINEMA

அஜித்தை வச்சி படம் பண்ணப்போறேன்-விஜய்யிடம் சென்று அனுமதி கேட்ட பேரரசு! அதுக்கு தளபதி சொன்ன பதில் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல கமெர்சியல் இயக்குனர்கள் வலம் வந்தாலும் ஒரு காலகட்டத்தில் பேரரசு திரைப்படங்களுக்கு என்றே அதிக வரவேற்பு இருந்தது. அவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஊர் பெயர்களை கொண்டே இருக்கும்.

அவர் முதன்முதலில் இயக்கிய “திருப்பாச்சி” திரைப்படம் 100 நாட்கள் மேல் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. முதல் திரைப்படமே தாறுமாறு ஹிட் என்பதால் இரண்டாம் திரைப்படத்திலும் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது.

இவ்வாறு அவர் விஜய்யை வைத்து மீண்டும் இயக்கிய “சிவகாசி” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஏவிஎம் நிறுவனமே பேரரசை தேடி வந்ததாம். “எங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கித் தாருங்கள். அஜித்தை வைத்து” என்று கூறியிருக்கிறார்கள்.

விஜய்யை வைத்து தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் ஹிட் கொடுத்த பேரரசுவை விஜய் இயக்குனர் என்றே முத்திரைக்குத்தி வைத்திருந்தார்களாம். இந்த நிலையில் பேரரசு நேராக விஜய்யிடம் சென்று “ஏவிஎம் நிறுவனத்தினர் என்னை அஜித் படத்தை இயக்க அழைக்கின்றனர். நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டாராம்.

அதற்கு விஜய், “உடனடியாக படத்தை ஒத்துக்கிட்டு டைரக்ட் பண்ற வழியை பாருங்க” என்று கூறினாராம். அதன் பின் “திருப்பதி” திரைப்படத்தின் தொடக்க விழாவில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த தகவலை பிரபல தயாரிப்பாளாரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Arun

Recent Posts

அப்போ சிவகார்த்திகேயன்.. இப்போ இவரா..? பிரபல ஹீரோவின் மார்க்கெட்டை காலி பண்ண பார்க்கும் மிஸ்கின்..!!

இயக்குனர் பாண்டிராஜ் பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட…

9 மணி நேரங்கள் ago

வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த ஊர்வசி.. அதுக்கு பிரசாந்த் அப்பா சொன்ன காரணம்..!

அந்தகன் திரைப்படத்தில் நடிக்க வாங்கிய பணத்தை ஊர்வசி திருப்பிக் கொடுத்து விட்டதாக பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கூறியிருக்கின்றார். தமிழ் சினிமாவில்…

10 மணி நேரங்கள் ago

என்னது..! தளபதி 69 படத்தில் ஆண்டவரா..? இது அன்பு கூட்டணியா, இல்ல நரி தந்திரமா..!

தளபதி 69 திரைப்படத்தில் கமலஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. தமிழ் சினிமாவில் டாப்…

11 மணி நேரங்கள் ago

சிகப்பு நிற உடையில்… கவர்ச்சியில் தாராளம் காட்டும் பரதேசி பட நடிகை… லேட்டஸ்ட் போட்டோஸ்…!

நடிகை வேதிகா வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில்…

11 மணி நேரங்கள் ago

கையில் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் சிவகார்த்திகேயன்.. அந்த பாப்பா யாரோட குழந்தை தெரியுமா..?

நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் குழந்தையை கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ்…

12 மணி நேரங்கள் ago

தளபதி கேட்டவுடனே OK சொல்லிட்டாரு.. விஜய் சேதுபதி, பிரபுதேவா மாஸ் பண்ணிட்டாங்க.. எமோஷனலாக பேசிய பிரசாந்த்..!!

90ஸ் காலகட்டத்தில் பெண்களின் கணவன் நாயகனாக வலம் வந்தவர் பிரஷாந்த். டாப் ஸ்டார் என அழைக்கப்படும் பிரசாந்த் சங்கர், மணிரத்தினம்…

12 மணி நேரங்கள் ago