Categories: சினிமா

வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த ஊர்வசி.. அதுக்கு பிரசாந்த் அப்பா சொன்ன காரணம்..!

Spread the love

அந்தகன் திரைப்படத்தில் நடிக்க வாங்கிய பணத்தை ஊர்வசி திருப்பிக் கொடுத்து விட்டதாக பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கூறியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் தற்போது தனது 50வது திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு அந்தகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரசாந்தின் தந்தையும் இயக்குனருமாக தியாகராஜன் இயக்கியிருக்கின்றார். ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அந்தாதூண் என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி இருக்கின்றது.

இந்த திரைப்படத்தில் பிரசாந்துடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், பெசன்ட் நகர் ரவி, கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, ஊர்வசி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள், இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஆந்தம் பாடலை இன்று நடிகர் விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்திருந்தார்கள். இதில் வனிதா விஜயகுமார் பேசும்போது பிரசாத்திற்கு கிடைத்த அப்பா போல் எனக்கு அப்பா கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் டப்பிங் பேச வரும்போது எனக்கு பேசிய தொகையை விட இரண்டு மடங்கு தொகை அதிகமாக கொடுத்தார்.

ஒருநாள் என்னுடைய போன் தொலைந்து போனது அப்போது எனக்கு ஐ போன் வாங்கி கொடுத்தார் என்று பெருமையாக பேசினார். இதையடுத்து பேசிய பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கூறிய போது ஊர்வசி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கொச்சினில் இருந்து நேரடியாக வந்திருக்கின்றார். படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் பேசிய தொகையை ஊர்வசிக்கு கொடுத்து விட்டேன்.

பின்னர் டப்பிங் பேச வரும்போது அவர் கையில் ஒரு பெரிய கவர் கொண்டு வந்தார். அந்த கவரை என்னிடம் கொடுத்து இந்த படத்தில் நடித்ததற்காக நீங்கள் எனக்கு அதிக சம்பளம் கொடுத்து விட்டீர்கள். தயவு செய்து இந்த பணத்தை நீங்கள் திரும்பி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். எனக்கு இந்த காலத்தில் இப்படி ஒரு நடிகையா? என்று ஆச்சரியமாக இருந்தது என மேடையில் ஊர்வசி குறித்து மிகப்பெருமையாக பேசியிருந்தார் இயக்குனர் தியாகராஜன்.

Mahalakshmi

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

2 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

2 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

3 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

3 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

3 மணத்தியாலங்கள் ago