அடச்சீ…. நீங்கயெல்லாம் என்ன மனுஷங்க?… ரீல்ஸ்க்காக இப்படியா பண்றது… கண் பார்வை இல்லாத தம்பதியின்… வறுமையை வைத்து காசு பார்க்கும் நபர்கள்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

By Swetha on ஐப்பசி 1, 2026

Spread the love

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர மாஞ்சி என்பவரும் அவரது மனைவியும் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆவார். மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் இந்த தம்பதிக்கு, தங்குவதற்கு அரை சென்ட் நிலம் கூட சொந்தமாக இல்லை. அன்றாடப் பிழைப்பிற்கே கடும் போராட்டங்களைச் சந்தித்து வரும் இவர்கள், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி தவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில், பிரபல கல்விச்சார் சமூக ஆர்வலரான கான் சார் இவர்களுக்கு சில உதவிகளைச் செய்துள்ளார். ஆனால், அந்த உதவியைப் பயன்படுத்தி சிலர் ஜிதேந்திர மாஞ்சியை வைத்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். தங்களின் சொந்தப் புகழுக்காகவும் விளம்பரத்திற்காகவும் மட்டுமே இவர்களைப் பயன்படுத்தி வீடியோக்கள் செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

   

பார்வையற்ற மற்றும் வறுமையில் வாடும் ஒரு தம்பதியின் நிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரமும் தங்குவதற்கு இடமும் அமைத்துத் தருவதே உண்மையான உதவியாக இருக்கும். அதை விடுத்து, கான் சார் செய்த உதவியை மட்டுமே முன்னிலைப்படுத்தி சோஷியல் மீடியாவில் காட்டி தங்களைத் விளம்பரப்படுத்திக் கொள்வது பலரிடையே அதிருப்தியையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.