bus

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்க்கு செல்வோர் கவனத்திற்கு… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…

By admin on ஐப்பசி 30, 2024

Spread the love

ஒவ்வொரு ஆண்டும் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் தீபாவளி. சாதிபத பேதம் இன்றி அனைவரும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. தீபாவளி அன்று குடும்பத்துடன் பட்டாசு புத்தாடை பலகாரங்கள் என அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு மகிழ்வார்கள். வேலை நிமித்தமாக பலர் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்று வேலை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

   

அப்படிப்பட்டவர்கள் இந்த தீபாவளிக்கு தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த முறை வார இறுதியில் தீபாவளி வந்திருக்கிறது. அதனால் மொத்தமாக ஐந்து நாட்கள் லீவு கிடைக்கிறது. அதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த ஊருக்கு செல்ல படையெடுத்து இருக்கின்றனர். இதனால் பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

   

இந்த தீபாவளிக்காக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில வழிமுறைகளை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை போலவே தற்போது தீபாவளிக்கும் சிறப்பு பேருந்துகள் நிறைய இயக்கப்பட்டு இருக்கின்றது.

 

500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இந்த தீபாவளிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ரெட்பஸ் போன்ற தனியார் பேருந்து நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்காத படிக்கு கட்டளை இடப்பட்டு இருக்கிறது. அப்படி ஏதேனும் அதிக டிக்கெட் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ன்றும் கூறப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் கவலை கொள்ளாமல் தீபாவளியை சொந்த ஊரில் சென்று கொண்டாடலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.