#image_title
பண்டைய காலத்தில் மன்னர்களும் மக்களும் வித்தியாசமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தனர். அதை இன்றைய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். நம் பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை எவ்வளவு நவ நாகரீகமாக இருந்தது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இன்றும் அகழ்வாராய்ச்சி பணிகள் ஒவ்வொரு இடத்திலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. புதிய புதிய பொருட்கள் கண்டுபிடித்து கொண்டே தான் இருக்கிறார்கள். இதை பார்க்கும்போது நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஒரு நிமிடம் நமது கற்பனை மன்னர் காலத்திற்கே சென்று வரும்.
அதேபோல மன்னர் ஆட்சி காலத்தில் கோவில்கள் முக்கியமான இடங்களை மன்னர்கள் தங்களது அரண்மனைக்கு அருகிலேயே கட்டியிருந்தனர். அந்த அரண்மனையிலிருந்து அந்த கோவிலுக்கும் அல்லது முக்கியமான இடங்களுக்கும் யாருக்கும் தெரியாமல் சென்றுவர சுரங்கபாதையை வைத்திருந்தனர். இதை பல வரலாற்று சிறப்புமிக்க நூல்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதே போல் ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கிறது.
பண்ருட்டி அருகே மிகவும் பழமையான கோயில் ஆன சொக்கநாதர் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் முருகன் சந்நிதிக்கு அருகே தான் ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் கோவில் கும்பாபிஷேகத்திற்காக சில நாட்களாக கோவிலை புதுமைப்படுத்தும் பணி நடந்து கொண்டே இருந்திருக்கிறது.
அப்போது அங்கே முருகன் சன்னதிக்கு அருகே தரையில் பதிக்கப்பட்டிருக்கும் கருங்கல்லை தட்டும் பொழுது வித்தியாசமான சத்தம் வந்திருக்கிறது. அந்த கல்லை பெயர்த்து பார்க்கும்போது அதற்கு கீழே ஒரு சுரங்க பாதை தென்பட்டிருக்கிறது. இதை பார்த்த பணியாளர்கள் உடனே கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் வேலையை நிறுத்தப்பட்டு வெகு நாட்களாக மூடி இருந்ததால் அந்த சுரங்க பாதையில் விஷவாயு இருக்கக்கூடும் என்று கூறி நிர்வாகிகள் இரண்டு காவல்துறை அதிகாரிகளை காவலுக்கு வைத்திருக்கின்றனர்.
உடனே அந்த கோவில் அதிகாரிகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் இங்கு வந்து ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த சுரங்கப்பாதை எப்படி வந்தது இது எங்கு வரைக்கும் செல்கிறது யார் இதை செய்திருப்பார்கள் என்பது போன்ற தகவல்கள் கூடிய விரைவில் நமக்கு தெரிவிப்பார்கள். இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது நமக்கு மிகவும் ஆச்சரியமாக தான் இருக்கிறது. பொதுமக்களும் வியப்புடன் வந்து கண்டு செல்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…
சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற…