டிஜிட்டல் இந்தியாவில் இப்படியா?… ஆம்புலன்ஸ் வர முடியாததால் உருளும் பீப்பாயில் சடலம்… உயிரிழந்த பின்னும் தொடரும் நரகம்…!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள ஜாவா பகுதியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் பெய்த பலத்த மழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. முறையான போக்குவரத்து மற்றும் சாலை வசதிகள் இல்லாத காரணத்தால், ஆம்புலன்ஸ் வாகனம் அந்த கிராமத்திற்குச் செல்ல முடியவில்லை. இதனால், இறந்த ஒருவரின் உடலை எடுத்துச் செல்ல வழியின்றி தவித்த கிராம மக்கள், இரண்டு பெரிய டிரம்களை ஒன்றாகக் கட்டி, அதன் மீது உடலை வைத்து ஆபத்தான முறையில் வெள்ளத்தைக் கடந்து வீட்டை அடைந்தனர்.

இந்த அவலநிலை குறித்து அப்பகுதி மக்கள் கடும் வேதனையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், உள்ளூர் கிராமப் பஞ்சாயத்து தலைவர் தனது அரசியல் செல்வாக்கைக் காட்டி, மக்கள் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமக்கு எந்தக் கவலையும் இல்லை என மிகவும் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் கிராம மக்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

ரேவா மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. ஒரு மாதத்திற்கு முன்பு ஜூலை மாதத்தில், இதே மாவட்டத்தில் முறையான சாலை வசதி மற்றும் ஆம்புலன்ஸ் இல்லாததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண் ஒருவரை மருத்துவமனைக்குக் கட்டிலில் சுமந்து சென்றனர்; ஆனால் அவர் சிகிச்சை கிடைக்காமல் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள், கிராமப்புறங்களில் இன்னும் அடிப்படை வசதிகள் கூடச் சென்றடையாத மோசமான நிலையை அப்பட்டமாகக் காட்டுகின்றன.

Gayathri

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

3 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

3 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

3 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

4 மணத்தியாலங்கள் ago