“மக்களே…பிக் பாஸ் சீசன் 9 க்கு ரெடியா…!” திரும்பவும் நம்ம விஜய் சேதுபதி….. சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

By Srimathi on புரட்டாதி 4, 2025

Spread the love

இந்திய தொலைக்காட்சியில் ரசிகர்கள் கொண்டாடிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று, பிக் பாஸ். கடந்த 2017 ஆம் ஆண்டில் முதல்முறையாக தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு வருடமும் புதுப்புது பொலிவுடன் பிக் பாஸ் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்த பிக்பாஸ் சீசன் 9 விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதன் புரோமோக்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 8 ஆவது பிக் பாஸ் சீசனை முதல்முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். மேலும் பிக்பாஸில் 9 ஆவது சீசனை யார் தொகுத்து வழங்குவார்? என ரசிகர்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த முறையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8 ஆவது சீசனில் விஜய் சேதுபதிக்கு, 60 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாம். அந்த சீசன் ஹிட்டானதை தொடர்ந்து, ஒன்பதாவது சீசனில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி ரூ. 75 கோடி பெற்றிருக்கிறார்.