தீபாவளி பண்டிகைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில் சிலர் வாடகை உரிமம் இல்லாத சொந்த வாகனங்களில் பயணிகளை ஏற்றுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக வெள்ளை பதிவு எண் கொண்ட சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. மேலும் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
