நொடியில் பயங்கரம்…! பாதசாரியை தூக்கி வீசிய கார்… சரக்கு வேனை கவிழ்த்து கோர விபத்து… ஓட்டுனரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்… பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 8, 2026

Spread the love

கேரள மாநிலம் பரப்பனங்காடி அருகே உள்ள கரிங்கல்லத்தானி பகுதியில் அதிவேகமாக வந்த செடான் கார் ஒன்று, வளைவில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரி மீது கோரமாக மோதியது. மோதிய வேகத்தில் நிற்காமல், அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தின் மீதும் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இக்கோர விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஓட்டுநரின் அதிவேகமும் கவனக்குறைவுமே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், நகரச் சாலைகளில் அதிவேகமாகச் செல்வதைத் தவிர்த்துப் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குமாறு காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.