Connect with us

பெண்களுக்கான PCOS பிரச்சினை.. நடை பயணத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய விஜய் டிவி பிரபலங்கள்..(வீடியோ)

CINEMA

பெண்களுக்கான PCOS பிரச்சினை.. நடை பயணத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய விஜய் டிவி பிரபலங்கள்..(வீடியோ)

 

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தார். சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான்.

   

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட்களும் வந்தன. அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் அந்த நெகடிவ் கமெண்ட்கள் அனைத்தும் இவரை பின்தொடர்ந்தது.  அப்படிப்பட்ட நேரத்தில் இவருக்கு உறுதுணையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இருந்துள்ளனர். தற்போது விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளினியாக பிரியங்கா பணியாற்றி வருகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ஏராளம்.

இவர்கள் தொகுத்து வழங்கும் விதத்திற்காகவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இப்படி  இணையத்தில் பிரபலமாகவும் பிசியாகவும் வலம் வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவரைப்போலவே இணையத்தில் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர்  தற்பொழுது தனது கடின உழைப்பால் பல்வேறு சீரியல்களில் நடித்து முன்னணி சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.

Viewport Images

இந்நிலையில் நடிகை ஆல்யா மானசா மற்றும் விஜே  பிரியங்கா இருவரும்  காவேரி ஹாஸ்பிடல் நடத்திய PCOS விழிப்புணர்வு Walkathon-ல் கலந்து கொண்டுள்ளனர். அங்கு வந்திருந்த அவரது ரசிகைகள் அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

Continue Reading
To Top