தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களுள் ஒருவரான 17 வயது சிறுவன் நிரஞ்சன், அரிய வகை தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் இயக்கங்களை இழந்த நிலையிலும், பவன் கல்யாண் மீதான அன்பால் படுக்கையிலிருந்தபடியே அவரது பாடல்களுக்கு நடனமாட முயன்றார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, இறுதியில் பவன் கல்யாணின் கவனத்திற்கும் சென்றடைந்தது.
இதனையறிந்த பவன் கல்யாண், நேரடியாக நிரஞ்சனின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் அன்போடு உரையாடி, தைரியம் கூறினார். மேலும் திருப்பதி பிரசாதம், நிதியுதவி மற்றும் சிறுவனின் ஆசைக்கேற்ப ஒரு நாய்க்குட்டியையும் அன்றே பரிசாக வழங்கினார். அத்தோடு நில்லாமல், “என்னுடைய அடுத்த பெரிய படம் ரிலீஸாகும்போது நாம் இருவரும் தியேட்டரில் ஒன்றாகப் படம் பார்க்கலாம், நீதான் என் ஸ்பெஷல் கெஸ்ட்” என்ற நெகிழ்ச்சியான வாக்குறுதியையும் பவன் கல்யாண் அளித்திருந்தார்.
பவன் கல்யாணுடன் தியேட்டரில் படம் பார்க்க வேண்டும் என்ற அந்த நாளுக்காக சிறுவன் நிரஞ்சன் ஆவலோடு காத்திருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். பவன் கல்யாணை நேரில் காணும் ஆசை நிறைவேறிய போதிலும், அவருடன் படம் பார்க்கும் கடைசி கனவு நிறைவேறாமல் போனது அவரது குடும்பத்தினரையும், பவன் கல்யாண் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…