செந்தில் முதல் சூரி வரை.. கனத்த இதயத்துடன் இசைக்குயில் பவதாரணிக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள்.. வீடியோ..

By Mahalakshmi

Published on:

இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளான பாடகி பவதாரணி மறைந்து செய்தி கேட்டு அனைத்து திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த படையெடுத்து வந்த இளையராஜாவின் வீட்டுக்கு கனத்த இதயத்துடன் வந்த திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வீடியோ வெளியானது.

Bhavadharani

   

பாடகி பவதாரணி, இலங்கையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 26 ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் இலங்கையில் இருந்து நேற்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. இவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த ஒன்று திரண்டன திரைபிரபலங்கள்.

முதல் ஆளாக நடிகர்  சிவகுமார் பாடகி பவதாரணி யின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வாடிய முகத்துடன் வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்களும்; திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும்; இசையமைப்பாளர்கள்; இயக்குனர்கள் என பல்வேறு துறையில் இருந்து நேரில் அஞ்சலி செலுத்த வந்துள்ளார்கள். இதில் சிவக்குமார், நடிகை ராதிகா, நடிகர் விஷால், ஜீவா, சூரி, ஸ்ரீகாந்த், கார்த்தி, விஜய் அன்டனி,  ஆனந்தராஜ், இயக்குனர் ராஜா, சதிஷ், என பல நடிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்த படையெடுத்து வந்து  இருந்தனர்.

இதில் நடிகர் சூரி கைகளில் கெட்டுப் போட்ட நிலையிலும் இளையராஜாவின் மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்துள்ளார். அரசியல் பிரமுகரான அமைச்சர் விஜய் பாஸ்கரும் மறந்த பாடகி பவதாரணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி கனத்த இதயத்துடன்  வந்துள்ள கட்சி வீடியோ மூலம் பரவி வைரலாகிறது.

author avatar
Mahalakshmi