Categories: சினிமா

கடவுள் நம்பிக்கை இல்லாதவரிடம் பக்தி பாட்டு கேட்ட தயாரிப்பாளர்… தக் லைஃப் வரிகளைக் கொடுத்த பட்டுக்கோட்டையார்!

Spread the love

காலத்தால் அழியாத பல தத்துவ பாடல்களை நமக்கு தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சிறந்த தமிழ் அறிஞர், சீர்த்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி பாடியது தான் இவருடைய சிறப்பு. 19 வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர், உணர்ச்சிகளை தனது கவிதையில் கொட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசை கனவுகளையும், ஆவேசத்தையும், பாடல்களாக வடித்தவர். திரையுலகில் 180 பாடல்களையே எழுதினாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக அமைந்தவை.

எம் ஜி ஆருக்கு கண்ணதாசன் மற்றும் வாலிக்கு முன்பாக ஆஸ்தான பாடல் ஆசிரியராக விளங்கியவர் பட்டுகோட்டையார்தான். ஆனால் தன்னுடைய 29 ஆவது வயதிலேயே அவர் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்ததால் அவரின் சினிமா வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிந்தது.

சினிமா ஆசையில் சென்னை வந்த பட்டுக்கோட்டைக்கு முதலில் வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லை. இதனால் அவர் சிறிதுகாலம் வறுமையில் வாடியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு வந்துள்ளது. கடவுள் நம்பிக்கை இல்லாத பட்டுக்கோட்டையாரிடம் கடவுளை வாழ்த்தும் வகையில் ஒரு பாடல் வேண்டும் என்று தயாரிப்பாளர் ஒருவர்  கேட்டுள்ளார்.

தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் அந்த பாடலை எழுதமாட்டேன் என்று நேரடியாக சொல்லவும் அவருக்கு மனமில்லை. ஏனென்றால் முதல் முதலாக தனக்கு பாட்டெழுத வந்துள்ள வாய்ப்பு இது. அதே நேரத்தில் தனது கொள்கையையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்ற இரட்டை மனநிலையில் இருந்துள்ளார். இப்படி யோசித்து கடைசியில் பாடலை எழுதியுள்ளார்.

பாடலின் முதல் வரிகளே ‘’நல்லாருக்கும் பொல்லாருக்கும் நடுவில் இருக்கும் சாமி, நீ கல்லா போன காரணத்தை எல்லோருக்கும் காமி’’ என்று எழுதி கொடுத்துள்ளார். இந்த வரிகளை படித்து பார்த்த அந்த தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டாராம். உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனால் அந்த பாடலை தன் படத்தில் பயன்படுத்தவும் இல்லை.

இதன் பிறகு அவருக்கு மகேஸ்வரி என்ற படத்தில் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படத்தின் பாடல்கள் வெற்றி பெற தொடர்ந்து பல படங்களில் பாட்டெழுத அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

vinoth

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago