சிலி நாட்டில் உள்ள சாண்டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்ற லாடாம் ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியது. அப்போது விமானத்தின் உள்ளே பயங்கர சத்தத்துடன் வெளிச்சம் பரவியதால், பயணிகள் பெரும் பீதியடைந்தனர். இந்தச் சம்பவத்தை பயணியொருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
அந்தப் பயங்கரமான சூழ்நிலையிலும் விமானிகள் மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை எந்தவித விபத்துமின்றிப் பாதுகாப்பாகத் தரையிறக்கினர். இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நவீன விமானங்கள் இது போன்ற இயற்கைச் சீற்றங்களையும், மின்னல் தாக்கங்களையும் தாங்கும் வகையில் ஃபாரடே கூண்டு போன்ற பாதுகாப்புத் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
