CINEMA
‘இது தான் 2007 அப்போ போட்ட அஃரீமண்ட்.. அவுங்க நேர்மையா இருந்திருந்தா’..? பட்ட அவமானங்களை அவிழ்த்த அமீர்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அமீர். இவர் நடிகர் கார்த்திக்கை வைத்து கொடுத்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் ‘பருத்திவீரன்’. இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகர் கார்த்திக் தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை பல வருடங்களாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் இடையே இன்றும் தொடர்ந்து வருகிறது .
இவர்களின் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் தான் உள்ளது. இந்நிலையில் திடீரென இதில் திரை பிரபலங்கள் குறுக்கிட்டு இயக்குனர் அமீருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஏனென்றால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டியில் அவ்வளவு தரக்குறைவாக இயக்குனர் அமீரை பேசி இருந்தார். இதனால் தற்பொழுது பிரபலங்கள் ஒவ்வொருவராக பொங்கி எழுந்து தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் அமீர் இந்த பிரச்னை குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டியானது இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ‘ நான் பட்ட அவமானமெல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்ல. அதெல்லாம் சொன்னா ஒன்னு மேல ஒன்னு வந்துகிட்டே இருக்கும். அப்புறம் எப்போதுமே ஒட்டாதுன்னு வச்சுக்கோங்களேன். பருத்திவீரன் படத்தில் ஓவர் பட்ஜெட் ஆயிடுச்சு.
என்கிட்ட இருந்த படத்தை நெகட்டிவ் ரைட்ஸ் வாங்கி ஞானவேல்ட குடுக்குறாங்க. படம் நல்லா ஓடினா நான் செலவழிச்ச காசு திருப்பி குடுக்கணும்கிறது தான் தயாரிப்பாளர் சங்கத்துல 2007 ல போட்ட அக்ரிமெண்ட் .அந்த படத்துல சங்கம் போட்ட அக்ரீமெண்ட் ஹானர் பண்ணாம இருக்கிறது இன்னொரு தயாரிப்பாளர் .சங்கம் அதுக்கு ஆக்சன் எடுக்கணுமா வேண்டாமா?.
ஏன் எடுக்கல? எது தடுத்தது உங்கள? என்கிட்ட இருந்து எழுதி வாங்க முடிஞ்சா உங்களால, பணத்தை அவர்கிட்ட இருந்து ஏன் பெற்று தர முடியல .அப்படினா நீங்க ஒரு சார்பு நிலை எடுத்துட்டீங்க. நான் போய் கேட்கிறேன் வாய் தகறாரு வந்தது. நான் கோர்ட்க்கு போறேன்னு சொல்றேன். அப்போ நீ சங்கத்தையே மீறி கோர்ட்டுக்கு போவியா? சங்கம் நேர்மையா இருந்தா நான் ஏன் சார் கோர்ட்டுக்கு போறேன்?’ பட்ட அவமானங்களை வேதனையுடன் மனம் திறந்து கூறியுள்ளார் இயக்குனர் அமீர். இதோ அந்த வீடியோ…