Categories: சினிமா

நண்பன் படத்தை நான்தான் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டார் விஜய்.. ஷங்கர் வந்தது எப்படி? – பார்த்திபன் பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைக் குறைத்துக் கொண்டார் சீதா. ஆனால் பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அவரின் இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். இப்போது அவர் சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்ற படத்தை இயக்கி அதை இந்தியன் 2 ரிலீஸ் ஆகும் நாளில் ரிலீஸ் செய்யவுள்ளார்.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் பல யுடியூப் சேனல்களில் நேர்காணல்கள் அளித்து வருகிறார். அதில் தன்னுடைய திரைவாழ்க்கையில் சந்தித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ஏன் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

அதில் “சூர்யாவோடு படம் இயக்க ஒருமுறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. விஜய்யை ஆரம்ப காலகட்டங்களில் என் படத்தில் நடிக்க வைக்க அவரின் அப்பா கேட்டார். அதே போல அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் பேசுவது போல இருக்கும் கவிதைகளை நான்தான் எழுதித் தந்தேன். அதை விஜய்தான் என்னிடம் கேட்க சொன்னாராம்.

அதே போல 3 இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்த போது, அந்த படத்தை நான்தான் இயக்கவேண்டும் என விஜய் ஆசைப்பட்டார். ஆனால் தயாரிப்பாளர்கள் ஷங்கர் வந்தால் பிஸ்னஸ் அதிகமாகும் என முடிவெடுத்தார்கள். அது சரியான முடிவுதான். நானே அந்த முடிவைதான் எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

1 மணத்தியாலம் ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

2 மணத்தியாலங்கள் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago