தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைக் குறைத்துக் கொண்டார் சீதா. ஆனால் பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அவரின் இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். ஆனாலும் தொடர்ந்து வித்தியாசமான(?) படங்களை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்து வருகிறார்.
பார்த்திபன் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான முதல் படம் ‘புதிய பாதை’. ஆனால் அதற்கு முன்பாகவே பார்த்திபன், பாக்யராஜ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். அந்த படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியிட்டு படத்தை அறிவித்தனர். அந்த படத்துக்கு இளையராஜாதான் இசையமைப்பாளராக பணியாற்ற வேண்டும் எனப் பார்த்திபன் கேட்டுள்ளார். ஆனால் அப்போது பாக்யராஜ் தானே இசையமைப்பாளர் ஆகி சில படங்களுக்கு இசையமைத்து வந்ததால் அவர் மேல் கோபத்தில் இருந்த இளையாராஜா, பாக்யராஜ் தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்க முடியாது என சொல்லிவிட்டாராம்.
ஏன் அப்படி சொன்னார் என்று இப்போது பார்த்திபன் ஒரு நேர்காணலில் பதிவு செய்துள்ளார். அதில் “பாக்யராஜ் சார் தானே இசையமைக்க வேண்டும் என்று ஆர்மோனியம் வாங்கிட்டு போனத இளையராஜா சார் பாத்துட்டாரு. அதனால என்கிட்ட ‘உன் படத்துக்கு நான் இசையமைக்க மாட்டேன். நீயும் அவர மாதிரி ஒரு ஆர்மோனியம் வாங்கிட்டு போய் ம்யூசிக் பண்ணு’ என சொல்லிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…