திரைப்பட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தனது தனிமை மற்றும் மறுமணம் குறித்த விருப்பத்தை நேர்காணல் ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். நடிகை சீதாவுடனான விவாகரத்துக்குப் பிறகு கடந்த 24 ஆண்டுகளாகத் தனிமையிலேயே வாழ்ந்து வரும் பார்த்திபன், தனது இரு மகள்களுக்கும் திருமணம் செய்து முடித்துவிட்டார். தற்போது தனது மகன் ராதாகிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து வைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பேட்டியில், மகன் திருமணத்திற்குப் பிறகு அவன் தனது தனிவாழ்க்கையைத் தொடங்கிவிடுவான் என்பதால், வீட்டில் தான் முற்றிலும் தனிமையாகிவிடுவேன். அந்தச் சூழலில் தனக்கென ஒரு வாழ்க்கைத்துணை தேவை என்பதை உணர்வதாகக் கூறிய அவர், அந்தத் துணை வெறும் மனைவியாக மட்டுமல்லாமல், தன்னைச் சரியாகப் புரிந்துகொள்ளும் ஒரு சிறந்த தோழியாக இருக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
