“பிள்ளைகளை காணோம்…” 12 நாட்களாக சிறுமிகளை தேடி அலைந்த பெற்றோர்… அந்த இடத்தில் இருந்த சிறுமிகள்…. நடந்தது என்ன…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 29, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் சராய் மம்ரேஜ் பகுதியில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்பு திடீரெனக் காணாமல் போன இரண்டு சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயதான நிதி பாண்டே மற்றும் அவரது 9 வயது சகோதரி அனன்யா பாண்டே ஆகிய இரு சிறுமிகளும் கடந்த 12 நாட்களாகக் காணாமல் போய் பெற்றோரைத் தவிக்க வைத்தனர். இந்நிலையில், வாரணாசியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் இருவரும் பத்திரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, போலிஸாரின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் இந்தச் சிறுமிகளின் புகைப்படங்கள் வைரலாகித் தேடுதல் வேட்டை தீவிரமடைந்த நிலையில், இரு சிறுமிகளும் பாதுகாப்பாகக் கிடைத்தது பெரும் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சிறுமிகள் பிரயாக்ராஜில் இருந்து வாரணாசிக்கு எப்படி வந்தார்கள், யாரேனும் கடத்தி வந்தனரா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து போலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.