மும்பை போரிவலியில் உள்ள விட்டி இன்டர்நேஷனல் பள்ளியின் (Witty International School) முதல்வர் மீது பெற்றோர்கள் முன்வைத்துள்ள அதிர்ச்சியூட்டும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அதனைச் செலுத்த முடியாத பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
Now this is really extreme. Parents are alleging that principal of Witty International School, Brovali, Mumbai is asking them to send their wives to him if they are unable to pay the increased school fees. pic.twitter.com/r5StVI2FDM
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) December 20, 2025
அப்போது, கட்டணத்தைச் செலுத்த வசதி இல்லாதவர்கள், தங்கள் மனைவிகளைத் தன்னிடம் அனுப்புமாறு அந்தப் பள்ளியின் முதல்வர் அநாகரீகமாகக் கேட்டதாகப் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கல்வி நிறுவனத்தின் உயரிய பதவியில் இருக்கும் ஒருவரே இது போன்ற தரம் தாழ்ந்த கருத்தை வெளிப்படுத்தியது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
