படிக்கட்டில் விழுந்ததாக நாடகம்… 2 வயது பெண் குழந்தையை அடித்து கொன்ற பெற்றோர்…? உடல் முழுக்க சூடு வைத்த காயம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 18, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேசம் குண்டூர் நகரில் பெற்றோரின் சித்திரவதைக்கு இரையாகி இரண்டு வயதுப் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வயதுடைய பிஞ்சுக் குழந்தையைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்திய பெற்றோர், உடல் முழுவதும் பருத்தி குச்சி தழும்புகளும், தீக்காயங்களும், முகத்தில் கடுமையான காயங்களும் ஏற்பட்ட நிலையில் குழந்தையை மயக்கமடைந்த நிலையில் குண்டூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

https://twitter.com/pulsenewsbreak/status/2111669039147913361?s=20

   

குழந்தை படிக்கட்டில் விழுந்துவிட்டதாக நாடகமாடிய பெற்றோரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மருத்துவர்கள், குழந்தையைச் பரிசோதித்தபோது அது ஏற்கனவே இறந்துவிட்டது என்பதை உறுதி செய்தனர். மேலும் குழந்தையின் உடலில் இருந்த சித்திரவதை காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அருந்தல்பெட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பெற்ற தாயின் கண்மூடித்தனமான வெறிச்செயலுக்குப் பிஞ்சுக் குழந்தை பலியான இச்சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை ஈர்த்து வருகிறது.