நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஸ்ரீலீலா அதர்வா ரவிமோகன் குருசோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் ரூ. 100 கோடி வசூலித்த படமாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பராசக்தி படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது, வருகிற 7ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் பராசக்தி படம் ரிலீஸாகிறது என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் சரியாக ஓடாத இந்த படம் ஓடிடி தளத்தில் 4 வாரங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆக உள்ளது. ஓடிடி தளத்திலாவது ரசிகர்களின் வரவேற்பை பெறுமா என்பதும் கேள்விக்குறிதான்.
