“ஒரு இன்ச் நிலம் கூட பாதிக்காது”… பரந்தூரில் விவசாயிகளைக் காக்க களமிறக்கப்பட்ட புதிய “ஸ்பெஷல் ஆபீசர்”…. தவெக அரசு புதிய முடிவு….!

By Nanthini on ஆனி 17, 2026

Spread the love

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, புதிய சிறப்பு அதிகாரியாக கீதா என்பவரை அரசு தற்போது நியமித்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, இத்திட்டப் பணிகள் முற்றிலும் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்த அதிரடி நியமனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

எனினும், புதிய அதிகாரியின் நியமனமானது திட்டத்தை முடக்குவதற்காக அல்லாமல், அப்பகுதி விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் வாழ்வாதார இழப்பும் ஏற்படாத வகையில், சுமுகமான முறையில் நிலம் கையகப்படுத்தும் பணிகளைச் செம்மையாகக் கொண்டு செல்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.